4. திருப்பாவை - திருவெம்பாவை
திருப்பாவை ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழிஅந் தோள்உடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த
திருப்பாவை
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழிஅந் தோள்உடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
கடலைப் போன்ற கம்பீரத் தன்மையுடைய மழைக்குக் காரணமானவனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் உள்ள நீரைக் கொண்டு மழையைப் பெய்விக்காமல் இருக்காதே! கடல்நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, பேரொலி செய்து எம்பெருமா னுடைய உடல்போல் கறுத்து, வலிமையானதோள் களையுடைய பத்மநாபனின் கையில் இருக்கும் ஒளி பொருந்திய சக்கரத்தைப்போல மின்னலை வீசியும், வலம்புரி சங்கு ஒலிப்பது போல இடி ஒலியை எழுப்பியும், வெற்றியை மட்டுமே கொடுக்கும் அவனது வில்லில் இருந்து தொடர்ச்சியாகப் புறப்படும் அம்புகளைப் போல் இவ்வுலகில் நாங்கள் மகிழ்வுடன் வாழவும், வளம்பெறவும் மழையைப் பொழிவாயாக! இப்பாவை நோன்பினைக் கொண்டாட அனைத்து நீர்நிலைகளையும் நீரால் நிரப்புவாயாக!
திருவெம்பாவை
ஒள்நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கொடுஉள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேதவிழுப் பொருளை
கண்ணுக்கு இனியானைப் பாடிக்கசிந்து உள்ளம்
முண்ணெக்குநின்று உருகயாம் மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய்
ஒளிபொருந்திய புன்னகையாளே! உனக்கு மட்டும் இன்னும் விடியவில்லையா? கிளிமொழி பேசும் மங்கையர் அனைவரும் வந்து விட்டனரோ? எத்தனைப் பேர் என்பதை எண்ணிச் சொல்கிறோம். அதுவரை நீ உறங்கி காலத்தைப் போக்காதே. விண்ணுலகுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, மறைகளின் மேலான பொருளாக அமைந்தவனை, இனிப்பான அந்தச் சிவனை நாங்கள் உள்ளங்கசிய உருகி வணங்க வேண்டும். எனவே நீயே வந்து எண்ணிப் பார், எண்ணிக்கை குறைந்தால் திரும்பவும் தூக்கத்தைத் தொடர்ந்திடு.

Next Story