திருமணப்பொருத்த அட்டவணை


திருமணப்பொருத்த அட்டவணை
x
தினத்தந்தி 22 Dec 2016 7:22 AM GMT (Updated: 22 Dec 2016 7:22 AM GMT)

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல் மற்ற பொருத்தங்களும் பார்ப்பது நல்லது. ஜாதகத்தில் களத்திர தோஷம், பாவாதி தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை இருக்கிறதா? என்று பா

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல் மற்ற பொருத்தங்களும் பார்ப்பது நல்லது. ஜாதகத்தில் களத்திர தோஷம், பாவாதி தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

அதற்கு ஏற்ற அமைப்பு வரனின் ஜாதகத்திலும் இருக்க வேண்டும். ஆயுள்பாவம், யோக அமைப்பும் அறிந்து கொள்ள வேண்டும். தெசாசந்தி இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். அதன்பிறகே முடிவெடுக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணை எப்படி அமைந்தால் யோகம் கிடைக்கும்?
ஒருவரது வாழ்க்கையில் குரு பகவான் பச்சைக்கொடி காட்டினால் திருமணத்தடை அகலும். இல்லறம் நல்லறமாக விளங்கும். குரு 7-ம் இடத்தைப் பார்க்க வேண்டும். அல்லது குடும்ப ஸ்தானத்தைப் பார்க்க வேண்டும். 'வியாழன்' எனப்படும் குரு பகவான் பார்ப்பதைத்தான் 'வியாழ நோக்கம்' என்கிறார்கள்.

பொருத்தம் பார்க்கும் பொழுது களத்திர ஸ்தானத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். பிறகு அந்த ஸ்தானத்தை எந்தக் கிரகம் பார்க்கின்றது என்பதைஅறிய வேண்டும். பார்க்கும் கிரகம் பகை கிரகமா, இல்லை நட்புக் கிரகமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி எந்த நட்சத்திரக் காலில் இருக்கிறார்? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வைத்தியம், கை பார்த்து (நாடி பிடித்து) சொல்வது போல, ஜோதிடம் (நட்சத்திர) 'கால்' பார்த்துச் சொல்ல வேண்டும். நட்சத்திரக்கால், சப்தமாதிபதி அண்டிய கிரகமும் பகைக்கிரகமாக இருந்து, பார்க்கும் கிரகமும் பகை கிரகமாக இருந்தால் கல்யாணம் பேசி விட்டுப் போகலாம். இதுபோன்ற தடை அகல ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அந்தக் கிரகத்திற்கு ஏற்ற ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால், அதன்பிறகு வரும் திருமணப் பேச்சுக்கள் முடிவாகும்.

பத்துப்பொருத்தங்கள்  எவை  எவை?

1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோணி,
6. ராசி, 7. ராசி அதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை


பெண்ணின் நட்சத்திரம் விசாகம் 1, 2, 3-ம் பாதம் (துலாம் ராசி)


வ.எ -  ஆணின் நட்சத்திரம், ராசி - அமையும் மொத்தப்பொருத்தங்கள்    -   பொருத்தம்
      
1.    அஸ்வினி (மேஷம்) - 1, 3, 4, 5, 6, 7, 9, 10 - 8
2.    பரணி (மேஷம்) - 4, 5, 6, 7, 9, 10 - 6
3.    கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) - ரஜ்ஜு தட்டும் -
4.    கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) - ரஜ்ஜு தட்டும் -
5.    ரோஹிணி (ரிஷபம்) - 3, 4, 5, 7, 9, 10 - 6
6.    மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்) - 1, 4, 5, 7, 9, 10 - 6
7.    மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்) - 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
8.    திருவாதிரை (மிதுனம்) - 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
9.    புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்) - ரஜ்ஜு தட்டும் -
10.    புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) - ரஜ்ஜு தட்டும் -
11.    பூசம் (கடகம்) - 1, 4, 5, 6, 9, 10 - 6
12.    ஆயில்யம் (கடகம்) - 2, 4, 5, 6, 9, 10 - 6
13.    மகம் (சிம்மம்)   - 1, 2, 3, 4, 5, 6, 9, 10  -  8
14.    பூரம் (சிம்மம்)   - 4, 5, 6, 9, 10  -  5
15.    உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்)  -  ரஜ்ஜு தட்டும்    -
16.    உத்திரம் 2, 3, 4-ம் பாதம் (கன்னி)    -ரஜ்ஜு தட்டும்    -
17.    ஹஸ்தம் (கன்னி)   - 3, 4, 5, 6, 7, 9, 10   - 7
18.    சித்திரை 1, 2-ம் பாதம் (கன்னி)  -  1, 2, 4, 5, 6, 7, 9, 10 -   8
19.    சித்திரை 3, 4-ம் பாதம் (துலாம்)    -1, 2, 4, 5, 6, 7, 9, 10   - 8
20.    சுவாதி (துலாம்)  -  1, 4, 5, 6, 7, 9, 10   - 7
21.    விசாகம் 1, 2, 3-ம் பாதம் (துலாம்)   - ஏக நட்சத்திரம் கூடாது    -
22.    விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) -   ஏக நட்சத்திரம் கூடாது    -
23.    அனுஷம் (விருச்சிகம்) - 1, 5, 7, 9, 10 -   5
24.    கேட்டை (விருச்சிகம்)  -  2, 5, 7, 9, 10  -  5
25.    மூலம் (தனுசு)   - 1, 2, 3, 5, 7, 9, 10   - 7
26.    பூராடம் (தனுசு)  -  5, 7, 9, 10  -  4
27.    உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு)   - ரஜ்ஜு தட்டும்    -
28.    உத்ராடம் 2, 3, 4-ம் பாதம் (மகரம்)   - ரஜ்ஜு தட்டும்    -
29.    திருவோணம் (மகரம்)   - 3, 4, 5, 7, 8, 9, 10   - 7
30.    அவிட்டம் 1, 2-ம் பாதம் (மகரம்)  -  1, 2, 4, 5, 7, 8, 9, 10 -   8
31.    அவிட்டம் 3, 4-ம் பாதம் (கும்பம்)   - 1, 2, 4, 5, 7, 9, 10   - 7
32.    சதயம் (கும்பம்) -   1, 2, 4, 5, 7, 9, 10 -   7
33.    பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்)  -  ரஜ்ஜு தட்டும்    -
34.    பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்)  -  ரஜ்ஜு தட்டும்    -
35.    உத்திரட்டாதி (மீனம்)   - 1, 4, 7, 9, 10   - 5
36.    ரேவதி (மீனம்) - 4, 5, 7, 9, 10 - 5

Next Story