இன்பங்களை அள்ளி வழங்கும் ‘2017’


இன்பங்களை அள்ளி வழங்கும் ‘2017’
x
தினத்தந்தி 22 Dec 2016 1:00 PM IST (Updated: 22 Dec 2016 1:00 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஒவ்வொரு ஆண்டு பிறக்கின்ற பொழுதும், இந்த ஆண்டு நமக்கு எப்படியிருக்கும்? எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுமா?, செல்வ நிலை உயருமா?, செல்வாக்கு அதிகரிக்குமா?, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமா?, துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உ

புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஒவ்வொரு ஆண்டு பிறக்கின்ற பொழுதும், இந்த ஆண்டு நமக்கு எப்படியிருக்கும்? எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுமா?, செல்வ நிலை உயருமா?, செல்வாக்கு அதிகரிக்குமா?, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமா?, துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவார்களா?, கல்யாண வாய்ப்புகள் கை கூடுமா?, வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி நீங்க என்ன வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்?, பணி சிறப்பாக அமைந்து பார் போற்றும் நிலை அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று சிந்திப்போம். இந்த நேரத்தில் துர்முகி வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி (1.1.2017) ஞாயிற்றுக்கிழமை, திருவோண நட்சத்திரத்தில் மகர ராசியில் புத்தாண்டு பிறக்கப் போகிறது.

குரு சந்திர யோகத்தோடும், செவ்வாய், சனி பரிவர்த்தனையோடும் சூரியனுக்குரிய ஒன்று எண் ஆதிக்கத்தில் (2+0+1+7=10=1) சூரியனுக்குரிய ஆதிக்க நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்தில் புத்தாண்டின் தொடக்கம் அமைவதால், ராஜ கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி ராஜ யோகத்தை வழங்கப் போகிறது. எனவே கொற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுக்கும் பலன்கள் இனிய பலன்களாகவே அமையும்.

தெய்வங்களின் அருள் கிடைக்கும் ஆண்டு தமிழ் புத்தாண்டு தொடங்குவதைக் கொண்டாடுவது போல, ஆங்கிலப் புத்தாண்டையும் இப்பொழுது மக்கள் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

‘கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் மலர்ச்சி’ என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். அதனால் உலாவரும் கிரகங்களின் ஒப்பற்ற மாற்றங்கள் வரும் பொழுதெல்லாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். கீர்த்தி தரும் கிரகங் களைநேர்த்தியுடன் வழிபட்டால், பார்த்த செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பண பலமும் அதிகரிக்கும். சிவன்-உமாதேவி அருள் சேர்வதுடன், திருமாலுக்கு உகந்த நட்சத்திரமான திருவோணத்தில் புத்தாண்டு பிறப்பதால், திருமால்- லட்சுமியின் அருளும் இணைந்து, வழிபடுபவர்களின் எண்ணங்களை ஈடேற்றும் ஆண்டாக அமையப்போகிறது. எடுத்த காரியங்களில் வெற்றியை வழங்கும் ஆண்டாகவும் அமையும்.

கீர்த்தி தரும் கிரகங்கள்

இந்த ஆண்டில் பாம்பு கிரகங்கள் என்று வர்ணிக்கப் படும் ராகு-கேதுக்கள், சுப கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு, ஆயுள்காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி ஆகியவற்றின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும், 27.7.2017 அன்று சஞ்சரிக்கப் போகிறார்கள்.

பின்னோக்கிச் செல்லும் அந்தக் கிரகங்கள், நாம் வாழ்க்கையில் முன்னேறிச்செல்ல வழிகாட்டுபவை. எனவே அவரவர் சுய ஜாதகத்திற்கு ஏற்ற விதத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
குறிப்பாக மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் யோகபலம் பெற்றநாளில் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை செய்து கொள்வது நல்லது.

அடுத்து செப்டம்பர் 2-ந் தேதி குருப்பெயர்ச்சி நிகழ விருக்கிறது. மீனத்திற்கு அஷ்டமத்துக் குருவும், கடகத்திற்கு அர்த்தாஷ்டம குருவும், துலாத்திற்கு ஜென்ம குருவும் வருவதால் அவர்கள் குரு பிரீதி செய்துகொள்வது நல்லது.
வருடக் கடைசியில் 16.12.2017 அன்று சனி பெயர்ச்சியாகிறது. இதன் விளைவாக ரிஷபத்திற்கு அஷ்டமத்துச் சனியும், கன்னி ராசிக்காரர் களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமும், தனுசு ராசிக்காரர் களுக்கு ஜென்மச் சனி ஆதிக்கமும் ஏற்படுகிறது. இவர்கள் காக வாகனத்தானுக்குரிய பரிகாரங்களை முறை யாகச் செய்துகொள்வது நல்லது.

ஜாதகம் உங்களுக்குச் சாதகமா?


பொதுவாக இந்த புத்தாண்டு ‘1’ எண் ஆதிக்கத்தில் பிறப்பதாலும், சூரியனுக்குரிய ஆண்டு என்பதாலும் ஜாதகத்தில் சூரியபலம் பெற்றவர்கள், 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், செவ்வாய், சனி பரிவர்த்தனை இருப்பதால் விருச்சிக ராசி, கும்ப ராசியில் பிறந்தவர்கள், ஆண்டின் தொடக்க நாள் திருவோணம் என்பதால் ஜாதகத்தில் சந்திரபலம் பெற்றவர்கள், ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் பிறந்தவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அமைந்தவர்களுக்கெல்லாம் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது. வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும். வளர்ச்சி கூடும். பொன்னும், பொருளும் உயரும். மற்ற ராசிக்காரர் கள், மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் சுய ஜாதகத்திலுள்ள தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் அனைத்து நலன் களையும் பெறலாம்.

வெற்றி தரும் வழிபாடு

ஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமான், ஆறுமுகப்பெருமான், சிவன்-உமையவள், நந்தி தேவர், நடராஜர், குரு தட்சிணாமூர்த்தி, அறுபத்துமூவர், சரஸ்வதி, விஷ்ணு, லட்சுமி, பிரம்மா, நவக்கிரகங்கள், அனுமன், பைரவர், முனீஸ் வரர், துர்க்கை ஆகிய அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதோடு, அவரவர் குலதெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபட்டால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்லலாம்.

நல்லது நடக்கவும், நாடும் வீடும் செழிக்கவும், இல்லறம் இனிக்கவும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடு படவும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

இன்பங்களை அள்ளி வழங்கும்...

வருடக் கடைசியில் 16.12.2017 அன்று சனி பெயர்ச்சியாகிறது. இதன் விளைவாக ரிஷபத்திற்கு அஷ்டமத்துச் சனியும், கன்னி ராசிக்காரர் களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமும், தனுசு ராசிக்காரர் களுக்கு ஜென்மச் சனி ஆதிக்கமும் ஏற்படுகிறது. இவர்கள் காக வாகனத்தானுக்குரிய பரிகாரங்களை முறை யாகச் செய்துகொள்வது நல்லது.

ஜாதகம் உங்களுக்குச் சாதகமா?

பொதுவாக இந்த புத்தாண்டு ‘1’ எண் ஆதிக்கத்தில் பிறப்பதாலும், சூரியனுக்குரிய ஆண்டு என்பதாலும் ஜாதகத்தில் சூரியபலம் பெற்றவர்கள், 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், செவ்வாய், சனி பரிவர்த்தனை இருப்பதால் விருச்சிக ராசி, கும்ப ராசியில் பிறந்தவர்கள், ஆண்டின் தொடக்க நாள் திருவோணம் என்பதால் ஜாதகத்தில் சந்திரபலம் பெற்றவர்கள், ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் பிறந்தவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அமைந்தவர்களுக்கெல்லாம் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது.

வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும். வளர்ச்சி கூடும். பொன்னும், பொருளும் உயரும். மற்ற ராசிக்காரர் கள், மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் சுய ஜாதகத்திலுள்ள தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் அனைத்து நலன் களையும் பெறலாம்.

வெற்றி தரும் வழிபாடு

ஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமான், ஆறுமுகப்பெருமான், சிவன்-உமையவள், நந்தி தேவர், நடராஜர், குரு தட்சிணாமூர்த்தி, அறுபத்துமூவர், சரஸ்வதி, விஷ்ணு, லட்சுமி, பிரம்மா, நவக்கிரகங்கள், அனுமன், பைரவர், முனீஸ் வரர், துர்க்கை ஆகிய அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதோடு, அவரவர் குலதெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபட்டால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்லலாம்.

நல்லது நடக்கவும், நாடும் வீடும் செழிக்கவும், இல்லறம் இனிக்கவும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடு படவும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

Next Story