14. திருப்பாவை - திருவெம்பாவை
திருப்பாவை உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோவில்
திருப்பாவை
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோவில் சங்கு இடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நா உடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
இளம் நங்கையே! உன் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் உள்ள தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ்களை விரித்து மலர்ந்துள்ளன. ஆம்பல் மலர்கள் இதழ்களை மூடிக் கிடக்கின்றன. காவி உடையும், வெண்பற்களும் கொண்ட துறவிகள் திருக்கோவில் சன்னிதியில் சங்குகளை ஊதச்சென்று விட்டனர். நாளை நீராட எங்களை முந்தி எழுப்புவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவளே! வாக்குத் தவற வெட்கப் படாதவளே! சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற கைகளையும், தாமரை மலர்போன்ற கண்களையும் உடையவன் கண்ணன். அவனை போற்றிப் பாட எழுந்துவா!
திருவெம்பாவை
காதார் குழையாட பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடுஏலோர் எம்பாவாய்.
காதில் அணிந்த தோடுகள் ஆடவும், உடம்பில் அணிந்
துள்ள நகைகள் அசைந்தாடவும், கூந்தலில் சூடிய மாலைகள் ஆடவும், ஆடுகின்ற மாலைகளில் மொய்த்திடும் வண்டுகள் ஆட வும், குளிர்ந்த பொய்
கையில் மூழ்கி எழு வோம். பின்னர் தில்லையில் எழுந்தருளி இருக்கும் இறைவனை பாடி மகிழ்வோம். அவன் மறைப்பொருளை பாடுவோம். அவன் அணிந்த கொன்றை மலரைப் பாடி, முதலும் முடிவுமாக இருக்கும் நிலையைப் பாடி, நம்மைப் பாதுகாத்து ஆட்கொண்ட சக்தியின்,
மேன்மை பொருந்திய திருவடித் திறத்தைப் பாடி நீராடுவோம்.

Next Story