மணப்பாறை அருகே காரமேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை


மணப்பாறை அருகே காரமேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
x
தினத்தந்தி 28 Dec 2016 10:06 PM GMT (Updated: 28 Dec 2016 10:06 PM GMT)

மணப்பாறை அருகே காரமேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காரமேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீநகரில் பஞ்சமுக ஆஞ்ச

மணப்பாறை அருகே காரமேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காரமேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீநகரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக கோவிலில் பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டது. நேற்று அனுமன் ஜெயந்தி என்பதால் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களாலும், பால் போன்றவற்றாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 108 வடைமாலை மற்றும் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டது.

ராமபக்த ஆஞ்சநேயர் கோவில்

இதேபோல கோவில்பட்டி சாலையில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. சந்தனகாப்பு அலங் காரத்தில் காட்சி தந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வடை மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனையும், ரெயில்வே ஜங்ஷன் செல்லும் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

கல்லக்குடி

இதேபோல கல்லக்குடியில் உள்ள சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. முன்னதாக காலை அனுக்ஞை, விநாயகர் பூஜை, கும்ப பூஜை, வேதபாராயணம் மற்றும் 96 வகை திரவியங்களால் சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லெட்சுமி ஹோமம் போன்றவை நடைபெற்றன. இரவு 7.30 மணியளவில் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரமும், தொடர்ந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லக்குடி புதிய, பழைய சமுத்துவபுரம், மேலரசூர், கீழரசூர், கல்லகம், மால்வாய், முதுவத்தூர், பளிங்காநத்தம், கல்லக்குடி, பழனியாண்டி நகர், நாச்சிமுத்து காலனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். கொண்டு பயன்பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ராமலிங்கம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story