வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது


வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது
x
தினத்தந்தி 29 Dec 2016 11:00 PM GMT (Updated: 29 Dec 2016 10:06 PM GMT)

ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்து உற்சவம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி முக்கிய நிகழ்வான பகல் பத்து உற்சவம்

ஸ்ரீரங்கம்,

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது.

பகல் பத்து உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி முக்கிய நிகழ்வான பகல் பத்து உற்சவம் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7.45 மணிக்கு மகர லக்னத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், தங்ககாசுமாலை, முத்துமாலை, வைர காதுகாப்பு உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு 8.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார்.

அங்கு அரையர் சேவை, திருப்பாவாடை கோஷ்டி, உபயகாரர் மரியாதை உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் மாலை 6.15 மணியளவில் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

மோகினி அலங்காரம்

பகல் பத்து இரண்டாம் நாளான இன்று(வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்திற்கு 7.15 மணிக்கு வந்தடை கிறார். அதன்பின்னர் 7.45 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 4 மணியில் இருந்து 5.30 மணிவரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந் தேதி மோகினி அலங்காரமும், 8-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Next Story