ஜென் கதை : பெற்றுக்கொள்ளாத பரிசு யாருக்கு சொந்தம்?


ஜென் கதை : பெற்றுக்கொள்ளாத பரிசு யாருக்கு சொந்தம்?
x
தினத்தந்தி 3 Jan 2017 7:00 AM IST (Updated: 2 Jan 2017 6:10 PM IST)
t-max-icont-min-icon

அவர் ஒரு திறமையான போர் வீரர். தன்னுடைய இளம் வயதில் பல போர்க்களங்களைக் கண்டவர். பல வெற்றிகளைக் குவித்தவர். வயோதிகம் காரணமாக அவர் தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தன் சொந்த கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்து வந்தார்.

வர் ஒரு திறமையான போர் வீரர். தன்னுடைய இளம் வயதில் பல போர்க்களங்களைக் கண்டவர். பல வெற்றிகளைக் குவித்தவர். வயோதிகம் காரணமாக அவர் தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தன் சொந்த கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்து வந்தார்.

ஒரு நாள் அந்த கிராமத்திற்கு ஒரு இளம் வீரன் வந்தான். அவன், பயிற்சி அளித்து வரும் குருவை வீழ்த்தி, தான் தான் முதன்மை வீரன் என்று பெருமைப்பட்டுக் கொள்ள துடித்தான்.

அவன் உடல் பலம் பெற்றவன்தான் என்றாலும், எதிராளிகளை கோபப்படுத்தி, அவர்களை வீழ்த்துவான். இந்த யுக்தியைப் பயன்படுத்தி, பல வீரர்களை அவன் வெற்றி கொண்டிருந்தான்.

கிராமத்திற்கு வந்த இளம் வீரன், பயிற்சிக் கூடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த குருவை சந்தித்தான். ‘போர் வீரரே! நான் உங்களுடன் போரிட்டு உங்களை வெற்றி கொள்ள நினைக் கிறேன். நீங்கள் என்னுடன் போரிட்டுதான் ஆக வேண்டும். போரின் போது நான், பேச்சால் உங்களைக் காயப்படுத்தும் யுக்தியை கையாள்வேன். அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து போரிடாமல் போனால், நீங்கள் தோற்றுப்போனதாக எனக்கு ஒப்புதல் கடிதம் எழுதித் தர வேண்டும்’ என்றான்.

இதனைக் கேட்ட அந்த குரு சற்றே புன்னகைத்தபடி ‘சரி.. போருக்கு ஒப்புக் கொள்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டார். இளம் வீரனுடன் போரிடுவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவனுக்கும், தனது மாணவர்களுக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத்தர அவர் விரும்பினார். அதற்காகவே அவனுடன் போரிட ஒப்புக்கொண்டார்.

ஆனால் தங்கள் குருநாதர், போர் என்றால் என்னவென்றே தெரியாத, போருக்கு முன்பாக பேச்சால் மற்றவர்களை காயப்படுத்தும் யுக்தியைக் கொண்ட ஒருவருடன் போரிடுவதை அவரது சீடர்கள் விரும்பவில்லை. இருப்பினும் குருநாதர் ஒப்புக்கொண்டாரே என்று அமைதியாக இருந்தனர்.

நகரின் மையப்பகுதியில் மோதல் களம் அமைக்கப்பட்டது. களத்தைச் சுற்றி சீடர்கள் குழுமியிருக்க, இளம் வீரனும், குருவும் களத்திற்குள் நின்றனர். இளம் வீரன், குருவின் கோபத்தைத் தூண்டிவிட வேண்டும் என்பதற்காக மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டினான்; முகத்தில் காறி உமிழ்ந்தான்; மண்ணை வாரி தூற்றினான். அவரை அவமானப்படுத்தி, அதன் மூலமாக கோபமடையச் செய்து, தன் தாக்குதலைத் தொடங்கலாம் என்பது இளம்வீரனின் எண்ணம்.

ஆனால் வயதான அந்த குருவோ, அசைவற்று அப்படியே அமைதியாக நின்றிருந்தார். எவ்வளவோ முயற்சி செய்தும், குரு கோபம் கொள்வதாக இல்லை. அவர் கோபம் கொண்டு மோத வந்தால்தானே, அவரது பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு இளம்வீரன் வெற்றிபெற முடியும். அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இறுதியில் களைத்து போய், தோற்றுவிட்ட மனதுடன் இளம்வீரன் களத்தில் இருந்து வெளியேறினான்.

சீடர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர். ‘குருவே! என்ன இது? எதற்காக இப்படி அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தால் கூட பரவாயில்லை. வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே?’ என்று ஆவேசப்பட்டனர்.

குரு அதே அமைதியோடு அனைவரையும் பார்த்து சொன்னார், ‘யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?’.

இப்போது சீடர்களுக்கு புரிந்து போனது.

1 More update

Next Story