வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 17 Jan 2017 12:30 AM GMT (Updated: 16 Jan 2017 12:37 PM GMT)

காஞ்சீபுரம் புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

காஞ்சீபுரம் புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு பிறகு, ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்தாற்போல் வரதராஜ பெருமாள் ஆலயமும் சிறப்பு மிக்க தலங்களாக விளங்குகின்றன. இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது. இந்த ஆலயத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளம் இருக்கிறது. இந்த திருக்குளத்திற்குள் அத்திவரதர் என்ற பெயரில், சயன கோலத்திலான பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்கிறார். இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம். இறுதியாக கடந்த 1979–ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story