ஞானம் பெற்ற பிரம்மன்


ஞானம் பெற்ற பிரம்மன்
x
தினத்தந்தி 24 Jan 2017 7:37 AM GMT (Updated: 24 Jan 2017 7:37 AM GMT)

பிரம்மன் ஞான உபதேசம் பெற விரும்பி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அவரது தவத்தினால் மகிழ்ந்த இறைவன், தன் ஞானத்தையே வில்வ விதையாக மாற்றி, அந்த விதையை பிரம்மனிடம் கொடுத்தார்.

பிரம்மன் ஞான உபதேசம் பெற விரும்பி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அவரது தவத்தினால் மகிழ்ந்த இறைவன், தன் ஞானத்தையே வில்வ விதையாக மாற்றி, அந்த விதையை பிரம்மனிடம் கொடுத்தார். ‘இந்த விதை எந்தத் தலத்தில் ஒரு முகூர்த்த காலத்தில் (1.30 மணி நேரம்) முளைக்கின்றதோ, அந்த தலமே உனக்கு ஞான உபதேசம் கிடைக்கும் இடம்’ என்று அருள்புரிந்தார்.

வில்வ விதையை பிரம்மன், பல தலங்களில் இட்டுப் பார்த்தும் அது முளைக்கவில்லை. இறுதியாக திருக்கடவூர் திருத்தலத்தில் இட்டபோது அது ஒரு முகூர்த்த காலத்தில் முளைத்தது. பிரம்மனும் அங்குள்ள இறைவனை வழிபட்டு ஞான உபதேசம் பெற்றார். இந்த ஆலயத்தில் வில்வ மரமே தல விருட்சமாக விளங்குகிறது. பிரம்மன் பூஜித்த சிவலிங்கம், ‘வில்வ வனேஸ்வரர்’ என்ற பெயரோடு மேற்கு நோக்கிய சன்னிதியில் இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறைக்கு தென்கிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவிலும், காவிரிப்பூம்பட்டினத்திற்கு 9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருக்கடவூர் திருத்தலம். இது அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாகும்.

Next Story