வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 31 Jan 2017 12:30 AM GMT (Updated: 30 Jan 2017 11:53 AM GMT)

திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் இருக்கிறது கருங்குளம் திருத்தலம்.

திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் இருக்கிறது கருங்குளம் திருத்தலம். இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது கருங்குளம் மலையின் மேல் இருக்கிறது. இத்தல இறைவன் இரண்டு சந்தனக் கட்டைகளால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னன் ஒருவனுக்கு தீராத நோய் இருந்தது. அவனது கனவில் தோன்றிய இறைவன், ‘சந்தனக் கட்டைகளைக் கொண்டு ஒரு வாகனம் செய்யும்படியும், அதில் மிஞ்சும் இரண்டு கட்டைகளை இங்கு கொண்டு வந்து வைக்கும்படியும், அதில் நான் வாசம் செய்வேன்’ என்று கூறியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. இங்கு உறங்கா புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் புளியம்பூ பூக்குமே தவிர அது புளியங்காயாக மாறாது. மேலும் இங்கு தண்ணீர் வற்றாத கிணறும் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசே‌ஷமான விழாவாகும்.

Next Story