ஆன்மிகம்

பாவங்களைப் போக்கும் தீர்த்தம் + "||" + Sins Will go Tirth

பாவங்களைப் போக்கும் தீர்த்தம்

பாவங்களைப் போக்கும் தீர்த்தம்
பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும். குன்றம் என்றால் குன்று (மலை) என்று பொருள்.
ரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும். குன்றம் என்றால் குன்று (மலை) என்று பொருள். திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து ‘திருப்பரங்குன்றம்’ என ஆயிற்று. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என வேறு சில பெயர்களும் உள்ளன. திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.