ஆன்மிகம்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு + "||" + Sabarimala Ayyappa temple style opening tomorrow

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை,

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.

அய்யப்பன் கோவில்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

நடை திறப்பு

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார்.

தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

இந்த நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

17–ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை சென்ற இருபெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலைக்கு சென்ற இருபெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2. சபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய 2 பெண்களின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
3. பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.
4. சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
5. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோவிலில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.