வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 28 Feb 2017 12:30 AM GMT (Updated: 2017-02-27T17:26:50+05:30)

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இந்த ஆலயத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இந்த ஆலயத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை அனைவரும் சோட்டாணிக்கரை பகவதி என்றே அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது சிறப்புக்குரிய வி‌ஷயமாகும். இந்த அம்மனை வழிபாடு செய்தால் ஈசனின் திருவருளையும் பெறலாம் என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இத்தல அம்மனை ஒரு நாளில் முப்பெரும் தேவியர்களின் வடிவத்தில் வழிபாடு செய்யலாம். அதாவது காலையில் இந்த அம்மன் துர்க்கையாகவும், மதியம் லட்சுமி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருகிறாள். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிப்புள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர்.

Next Story