ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 28 Feb 2017 1:00 AM GMT (Updated: 27 Feb 2017 12:11 PM GMT)

கன்றுக்குட்டியானது எப்போதும் தாய்ப் பசுவின் பின்னே ஆர்வத்துடன் ஓடோடிச் செல்லும்.

இறை

கன்றுக்குட்டியானது எப்போதும் தாய்ப் பசுவின் பின்னே ஆர்வத்துடன் ஓடோடிச் செல்லும். மனிதர்களாகிய நாமும் அது போலவே, உலக உயிர்களுக்கு தாயாக விளங்கும் இறைவனின் பின்னே ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இறைவனைக் காண்பதற்கு மனம் துடிதுடித்து ஏங்க வேண்டும். ஏக்கம் உள்ளவர்களால் நிச்சயமாக நினைத்ததை அடைய முடியும்.

–ராமகிருஷ்ணர்.

குரு

ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன் களாலும் ஆன கட்டில் இருந்த ஒரு மனிதனை விடுவிப்பதற்கு, குருவால் மட்டுமே முடியும் என்று உபநிடதங்கள் உரைக்கின்றன. குரு ஒருவனுக்குள் இருக்கும் தடைகளை அகற்ற வழி செய்கிறார். நாம் உழைக்க வேண்டும். குருவும் உதவி செய்ய வேண்டும்.

–ரமணர்.

நன்மை

தர்மம் என்பதே நன்மை செய்வதுதான். தீமைகள் அனைத்தும் பாவத்தில் சேர்ந்து விடும். வலிமையும், ஆண்மையுமே தர்மம். பலவீனமும், கோழைத்தனமும் தீமை. சுதந்திரமான வாழ்க்கை புண்ணியமாக அமைகிறது. மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதே புண்ணியம். மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவது பாவச் செயல்.

–விவேகானந்தர்.


Next Story