இந்த வார விசே‌ஷங்கள் 28–2–2017 முதல் 6–3–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் 28–2–2017 முதல் 6–3–2017 வரை
x
தினத்தந்தி 28 Feb 2017 1:45 AM GMT (Updated: 27 Feb 2017 12:17 PM GMT)

28–ந் தேதி (செவ்வாய்) திருநெல்வேலி டவுண் மேல ரத வீதி பரமேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.

28–ந் தேதி (செவ்வாய்)

    திருநெல்வேலி டவுண் மேல ரத வீதி பரமேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்பத் திருவிழா.

    கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாண வைபவம், இரவு மகிஷாசூர சம்ஹாரம்.

    நத்தம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    திருகோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் கிரி பிரதட்சணம்.

    மேல்நோக்கு நாள்.

1–ந் தேதி (புதன்)

    திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் மாசி மகம் உற்சவம் ஆரம்பம்.

    கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.

    திருவைகாவூர் சிவபெருமான் பவனி.

    வேதாரண்யம் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

    சமநோக்கு நாள்.

2–ந் தேதி (வியாழன்)

    சதுர்த்தி விரதம்.

    திருப்பாப்புலியூர், காஞ்சி, மதுரை நன்மை தருவார் கோவில்களில் மாசி மகம் உற்சவம் தொடக்கம்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடயத்தில் பவனி.

    பெருவயல் முருகன் மே‌ஷ வாகனத்தில் திருவீதி உலா.

    திருத்தணி, காங்கேயநல்லூர், திருப்போரூர் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

    மதுரை கூடலழகர் கோவில் உற்சவம் ஆரம்பம், காலை அன்ன வாகனத்தில் சுவாமி ராஜாங்க சேவை.

    கோயம்புத்தூர் கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளி, குதிரை வாகனத்தில் பவனி.

    சமநோக்கு நாள்.

3–ந் தேதி (வெள்ளி)


    சஷ்டி விரதம்.

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் கருட சேவை.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்தில் பவனி.

    மதுரை கூடலழகர் அலங்கார சீவிகையில் மச்ச அவதாரக் காட்சி, இரவு சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்கார சேவை.

    கோயம்புத்தூர் கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.

    கீழ்நோக்கு நாள்.

4–ந் தேதி (சனி)

    கார்த்திகை விரதம்.

    திருப்பரங்குன்றத்தில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.

    அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்டர்  கோவிலில் அவதார தின விழா. காலை 6 மணிக்கு தொட்டில் வாகனத்தில் பவனி.

    திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ மந்திரம் உபதேசித்து அருளிய லீலை.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    கீழ்நோக்கு நாள்.

5–ந் தேதி (ஞாயிறு)

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.

    மதுரை கூடலழகர், கள்ளர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு கருட சேவை.

    திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும் புறப்பாடு.

    குடந்தை சக்கரபாணி சே‌ஷ    வாகனத்தில் திருவீதி உலா.

    திருக்கோட்டியூர் சவுமிநாராயண பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    மேல்நோக்கு நாள்.

6–ந் தேதி (திங்கள்)

    திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி.

    மதுரை கூடலழகர் காலை கஜேந்திர மோட்சம் அருளல், இரவு சே‌ஷ வாகனத்தில் புறப்பாடு.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தெய்வானை திருமணக் காட்சி.

    குடந்தை சக்கரபாணி கருட வாகனத்தில் வீதி உலா.

    சமநோக்கு நாள்.

Next Story