விநாயகர் வழிபாடு


விநாயகர் வழிபாடு
x
தினத்தந்தி 7 March 2017 7:40 AM GMT (Updated: 7 March 2017 7:40 AM GMT)

இறை வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு கொண்டது விநாயகர் வழிபாடு என்றால் அது மிகையல்ல. விநாயகரை எந்த பொருட்களிலும் உருவகம் செய்து வைத்து வழிபாடு செய்து விட முடியும்.

றை வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு கொண்டது விநாயகர் வழிபாடு என்றால் அது மிகையல்ல. விநாயகரை எந்த பொருட்களிலும் உருவகம் செய்து வைத்து வழிபாடு செய்து விட முடியும். கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் விநாயகரை மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி, முத்து, பவளம், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் போன்றவற்றில் கூட செய்து வழிபட முடியும். எந்த ஒரு பொருளிலும் விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம் என்பதால்தான், ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.

Next Story