அரச மரத்தை சுற்றும் வழிமுறை


அரச மரத்தை சுற்றும் வழிமுறை
x
தினத்தந்தி 10 March 2017 3:00 AM IST (Updated: 9 March 2017 12:42 PM IST)
t-max-icont-min-icon

அரசமரத்தை வலம் வரும்போது சரியான இடைவெளி விட்டு மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடக்கக்கூடாது.

* அரசமரத்தை வலம் வரும்போது சரியான இடைவெளி விட்டு மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடக்கக்கூடாது.

* இரு கரம் கூப்பி வணங்கியபடியே வலம் வருவது நல்லது.

* உடன் வருபவருடன் பேசியபடி நடக்கக் கூடாது. பதிலாக இறைவனின் துதி பாடலைப் பாடியபடி சுற்றி வரலாம்.

* அரச மரத்தை வலம் வருபவர்கள் குறைந்தபட்சம் 7 முறையும், அதிகபட்சமாக 108 முறை வலம் வர வேண்டும்.

* சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.

* அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம் வருவதை தவிர்த்து விடுங்கள்.

* ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால், கடன் தொல்லை நீங்கும். பய உணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

Next Story