ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + A miracle of the week

வாரம் ஒரு அதிசயம்

வாரம்  ஒரு  அதிசயம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’ என்றும், ‘அத்ரி’ என்பதற்கு ‘மலை’ என்றும் பொருள். சிவந்த கண்களுடன் கோப முகமாக இந்த மலையில் காட்சியளித்ததால், இவருக்கு இப்பெயர் வந்தது. ஜபாலி மகரிஷி என்பவர் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த திருமால், அவருக்கு இங்குள்ள மலை மீது பிரதோ‌ஷ நாளில் நரசிம்மராக காட்சியருளினார். இத்தல மூலவரான பாடலாத்ரி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரு கரத்தில் சங்கு, சக்கரமும், வலது கரத்தில் அபயமும், இடது கரத்தை மடி மீது வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். இந்த மூலவருக்கு, சிவபெருமானைப் போல மூன்று கண்கள் இருப்பது அதிசயமான ஒன்றாகும். மூலவர் குகைக் கோவிலில் வீற்றிருப்பதால், அவரை வலம் வர வேண்டுமானால், சிறிய குன்றினையும் சேர்த்தே வலம் வர முடியும்.


தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.