இந்த வார விசே‌ஷங்கள் 14–3–2017 முதல் 20–3–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் 14–3–2017 முதல் 20–3–2017 வரை
x
தினத்தந்தி 14 March 2017 2:00 AM GMT (Updated: 13 March 2017 1:23 PM GMT)

14–ந் தேதி (செவ்வாய்)காரடையான் நோன்பு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

14–ந் தேதி (செவ்வாய்)

    காரடையான் நோன்பு.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

    நத்தம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.

    சமநோக்கு நாள்.

15–ந் தேதி (புதன்)

    முகூர்த்த நாள்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம்.

    காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.

    நத்தம் மாரியம்மன் புஷ்பப்  பல்லக்கில் பவனி வரும் காட்சி.

    வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா.

    சமநோக்கு நாள்.

16–ந் தேதி (வியாழன்)

    முகூர்த்த நாள்.

    சங்கடஹர சதுர்த்தி.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் கோவிலில் லட்ச தீபக் காட்சி.

    சமநோக்கு நாள்.

17–ந் தேதி (வெள்ளி)

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னைமரக் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.

    திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை கற்பக விருட்ச வாகனத்தில் பவனி, இரவு சுவாமி– அம்மன் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.

    உப்பிலியப்பன் கோவில் சீனி   வாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சூரிய பிரபையிலும் பவனி.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை பெரிய வைரத் தேரில் வீதி உலா, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    கீழ்நோக்கு நாள்.

18–ந் தேதி (சனி)

    திருக்குறுக்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.

    உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு வெள்ளி சே‌ஷ வாகனத்திலும் வலம்  வருதல்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் சிறப்பு ஆராதனை.

    சமநோக்கு நாள்.

19–ந் தேதி (ஞாயிறு)

    திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.

    உப்பிலியப்பன் கோவில் சீனி  வாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரமாய் காட்சியளித்தல்.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    சமநோக்கு நாள்.

20–ந் தேதி (திங்கள்)

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் வீதி உலா.

    திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்தில் பவனி.

    உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் இரவு வெள்ளி அனுமன் வாகனத்திலும், தாயார் கமல வாகனத்திலும் புறப்பாடு.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    சமநோக்கு நாள்.

Next Story