மகத்துவம் தரும் ஒன்பது!


மகத்துவம் தரும் ஒன்பது!
x
தினத்தந்தி 15 March 2017 7:46 AM GMT (Updated: 15 March 2017 7:46 AM GMT)

எண்களில் சிறப்பு வாய்ந்தது ஒன்பது. ஒன்பதிற்கு ‘நவம்’ என்று பொருள். ஒன்பது கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வில் வளர்ச்சிக்குஅடிப்படை என்கிறது ஜோதிடம்.

நவக்கிரகங்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது.

நவ மணிகள்: கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்.

நவ உலோகங்கள்: பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தகரம், துத்தநாகம்.

நவ தானியங்கள்: நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை.

நவ விரதங்கள்:
சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேஸ்வர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்.

நவ குணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவ நிதிகள்:
சங்கம், பதுமம், மகாதூபம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்.

ஒன்பது என்ற எண் எத்தனை மடங்கானாலும், அதன் கூட்டுத் தொகை ஒன்பதில் தான் வந்து சேரும்.

ஒன்பதில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் யோகமானவர்கள் தான். ஆளுமைத் தன்மையும், தன்னம்பிக்கையும் மிக்கவர்கள்.

மழை தரும் மாரியம்மன்

பங்குனி மாதத்தில் அம்பிகையின் ஆலயங்களில் பூச்சொரிதல் விழா நடைபெறும். வாசமுள்ள, வண்ண வண்ண மலர்களை, கூடைகளில் ஏந்தி பாத யாத்திரையாகச் சென்று அம்பிகையின் மேல் தூவி பக்தி செலுத்துவர். இதனால் அற்புதமான பலன்கள் நமக்குக் கிடைக் கின்றன. தேனைச் சுமக்கும் பூக் களை அம்பிகைக்கு அர்ப்பணிக் கும் பொழுது தேனான வாழ்க்கை நமக்கு அமையும். நாம் பாதயாத்திரை செல்லும் பொழுது ஓம்சக்தி என்று நாம் உச்சரிக்கும் பொழுது நாம் சக்தி பெறுவோம்.

அம்பிகையின் மனதைக் குளிர்வித்தால் இந்த உலகம் குளிர்ச்சி அடையும். மழைவளம் பெருகும். ‘மாரியல்லால் ஒரு காரியமில்லை’ என்ற பழமொழிப் படி மாரியம்மனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால், மகத்தான பலன் நமக்குக் கிடைக்கும். சீரும், சிறப்பும் செல்வாக்கும் பெருக வைக்கும் மாரியம்மனை, பங்குனி மாதத்தில் மலர்தூவி வழிபடுவோம். புகழ் குவிய வழிகாண்போம்.

Next Story