இந்த வார விசே‌ஷங்கள்


இந்த வார விசே‌ஷங்கள்
x
தினத்தந்தி 5 April 2017 10:37 AM GMT (Updated: 5 April 2017 10:37 AM GMT)

4–ந் தேதி (செவ்வாய்) குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் பங்குனி உற்சவம் ஆரம்பம். திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலமாய் உபய கருட சேவை.

4–4–2017 முதல் 10–4–2017 வரை

4–ந் தேதி (செவ்வாய்)


 குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

 திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலமாய் உபய கருட சேவை.

    மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.

    குடந்தை ராமபிரான் வெண்ணெய் தாழி சேவை.

    பழனி முருகன் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலா.

    ராமகிரி கல்யாண நரசிம்ம பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.

    சமநோக்கு நாள்.

5–ந் தேதி (புதன்)

    ராம நவமி.

    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.

    திருச்சுழி சிவபெருமான் விருட்ச வாகனத்தில் வீதி உலா, அம்பாள் ஞானசம்பந்தருக்கு  ஞானப்பால்
ஊட்டும் நிகழ்ச்சி.

    அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் பூக்குழி விழா.

    மேல்நோக்கு நாள்.

6–ந் தேதி (வியாழன்)

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர் வலம், இரவு புஷ்பப்பல்லக்கு.

    மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம். இரவு சிம்மாசனத்தில் பவனி.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் விடையாற்று உற்சவம்.

    திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள், காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் வீதி உலா.

    காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரத உற்சவம்.

    கீழ்நோக்கு நாள்.

7–ந் தேதி (வெள்ளி)

    சர்வ ஏகாதசி.

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் வருசாபிஷேகம்.

    திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா.

    பழனி முருகப்பெருமான் மாலை மலைக்கோவில் தங்க ரதத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.

    கழுகுமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

    கீழ்நோக்கு நாள்.

8–ந் தேதி (சனி)

    சனிப் பிரதோ‌ஷம்.

    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் தங்கத் தேரோட்டத் திருவிழா.

    திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி ரத உற்சவம்.

    ராமகிரி கல்யாண நரசிம்ம பெருமாள் திருக்கல்யாணம்.

    கழுகுமலை, திருவாதவூர், கங்கைகொண்டான், திருச்சுழி, காஞ்சீபுரம் சிவபெருமான் ரத உற்சவம்.

    பழனி பாலதண்டாயுதபாணி திருக்கல்யாண வைபவம்.

    கீழ்நோக்கு நாள்.

9–ந் தேதி (ஞாயிறு)

    முகூர்த்த நாள்.

    பங்குனி உத்திரம்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.

    மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கு.

    சகல முருகன் கோவில்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.

    சமயபுரம்  மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    மேல்நோக்கு நாள்.

10–ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    பவுர்ணமி.

    சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்.

    மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை சே‌ஷ வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும் பவனி.

    பழனி முருகப்பெருமான் தங்கப் பல்லக்கிலும், இரவு தங்க குதிரையிலும் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

Next Story