ஆன்மிகம்

வறுமையை போக்கிய ஆதிசங்கரர் + "||" + Adi Shankar who fought poverty

வறுமையை போக்கிய ஆதிசங்கரர்

வறுமையை போக்கிய ஆதிசங்கரர்
ஆதிசங்கரர் சிறுவயதில் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். குருகுல வழக்கப்படி யாசகம் பெற்று உணவருந்த வேண்டும்.
திசங்கரர் சிறுவயதில் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். குருகுல வழக்கப்படி யாசகம் பெற்று உணவருந்த வேண்டும். அதன்படி ஒரு குடிசை வீட்டின் முன்பாக நின்று யாசகம் கேட்டார். தானம் செய்ய அந்த வீட்டில் பொருள் எதுவும் கிடையாது. அந்த வீட்டில் வசித்த பெண்ணே வறுமையில்தான் வாழ்ந்து வந்தார். இருப்பினும் வீட்டில் காய்ந்து போய் கிடந்த ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொண்டு வந்து, ஆதிசங்கரரிடம் தானமாக கொடுத்தார். தன்னிடம் வேறு எதுவும் இல்லை. தயவு கூர்ந்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

அவரது நிலையைக் கண்டு வேதனையடைந்த ஆதிசங்கரர், மகாலட்சுமியை நினைத்து மன   முருகப் பாடினார். அதுதான் ‘கனக தாரா ஸ்தோத்திரம்’ என்ற பாடலாகும். அவர் பாடல் பாடி முடித்ததும், அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக் கனிகள் மழையாகப் பொழிந்தன. இந்த நிகழ்வு நடந்ததும் ஒரு அட்சய திருதியை நாளில் என்பது குறிப்பிடத்தக்கது.