இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 2 May 2017 10:05 AM GMT (Updated: 2 May 2017 10:05 AM GMT)

2-ந் தேதி (செவ்வாய்) * உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அன்ன வாகனத்தில் வீதி உலா. * திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி. * மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பரி லீலை. * திருச்சி தாயுமானவர் கயிலாச வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருதல். * திருத்தணி முருகப்பெருமான் இரவு வெள்ளி வாகனத்தில் புறப்பாடு. * சமநோக்கு நாள்.

2-5-2017 முதல் 8-5-2017 வரை

2-ந் தேதி (செவ்வாய்)

* உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அன்ன வாகனத்தில் வீதி உலா.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி.

* மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பரி லீலை.

* திருச்சி தாயுமானவர் கயிலாச வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருதல்.

* திருத்தணி முருகப்பெருமான் இரவு வெள்ளி வாகனத்தில் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

3-ந் தேதி (புதன்)

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

* மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

* ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொரு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு.

* உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி இந்திர விமானத்தில் உலா.

* திருச்சி ரத்தினவரி அம்மையாருக்கு, திருத்தாய் வழங்குதல். இரவு சுவாமி- அம்பாள் விருட்ச பாரூடராய் அறுபத்து மூவருடன் பவனி.

* மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (வியாழன்)


* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

* தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ரிஷபத்தில் பவனி.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா.

* மதுரை மீனாட்சி சொக்கநாதர், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் பவனி.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* திருச்சி, சீர்காழி, திருப்பனந்தாள் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (வெள்ளி)


* வாசவி ஜெயந்தி.

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் அதிகாலை உருகு சட்ட சேவை.

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் தங்கச் சப்பரத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம். சுவாமி- அம்பாள் இருவரும் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு தங்க கருட வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (சனி)

* சர்வ ஏகாதசி.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மதுரை எழுந்தருளல்.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் வேணுகோபாலர் திருக்கோலமாய் யானை வாகனத்தில் பவனி.

* ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொரு விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலா.

* உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவபெருமாளை பூஜை செய்தல்.

* மதுரை மீனாட்சி அம்மன் திக் விஜயம் செய்தருளல், அம்பாள்- சுவாமி இருவரும் இந்திர விமானத்தில் வலம் வருதல்.

* திருத்தணி முருகப்பெருமான் யாழி வாகனத்தில் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

7-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் களில் ரத உற்சவம்.

* உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்.

* மேல்நோக்கு நாள்.

8-ந் தேதி (திங்கள்)

* பிரதோஷம்.

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.

* நாங்குநேரி வானமாமலை பெருமாள் தேரோட்டம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

Next Story