ஆன்மிகம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா + "||" + Veeragara Perumal temple Chariot festival

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

திருவள்ளூர்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 1–ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், கருட வாகனம், தங்கசப்பரம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றுகாலை தேர் திருவிழா நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) சாமிக்கு திருமஞ்சனமும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஆள்மேல்பல்லக்கு மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜன்ட் சி.சி.சம்பத் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

குன்றத்தூர்

குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேச்சர சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 1–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவாக தேர் திருவிழா நேற்று நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் குன்றத்தூர், படப்பை, சோமங்கலம், மாங்காடு, பல்லாவரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளுவன், பரமசிவம், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் செங்குந்த மகா சபையினர் செய்திருந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயம்; போலீசார் விசாரணை
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயமாகிவிட்டதாக வந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13–ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
3. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது.
4. சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம்: இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் - காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
5. சென்னிமலையில் கோவில் –வீடுகளில் கலெக்டர் ஆய்வு; பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு
சென்னிமலையில் வீடு– கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.