அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிப்பு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்


அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிப்பு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
x
தினத்தந்தி 25 May 2017 10:30 PM GMT (Updated: 25 May 2017 10:30 PM GMT)

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

நாமக்கல்,

 இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.



Next Story