ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 30 May 2017 6:50 AM GMT (Updated: 30 May 2017 6:50 AM GMT)

காமம், பேராசை, எல்லா சுகமும் வேண்டும் என்று வாழ்க்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுதல் போன்றவற்றால்தான் அனைத்து பிரச்சினைகளும் வருகின்றன.

ஞானம்

த்மா பரிபூரண ஆனந்தமானது. இத்தகைய ஆன்மாவில் துன்பம் நிறைந்த சம்சாரம் இருப்பதாக நீ ஏன் நினைக்க வேண்டும்? ஆத்மாவில் துன்பம் இருப்பதாக நீ உணர்வதற்குக் காரணம், உன்னுடைய அறியாமையே ஆகும். ஞானம் ஏற்பட்டவுடனேயே இந்தத் தவறான உணர்வு உன்னை விட்டு மறைந்து போகும்.

-ஸ்ரீராமர்.

துன்பம்

காமம், பேராசை, எல்லா சுகமும் வேண்டும் என்று வாழ்க்கையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுதல் போன்றவற்றால்தான் அனைத்து பிரச்சினைகளும் வருகின்றன. இவற்றின் காரணமாகத்தான் பிறவிகளும் தொடர்ந்து வருகின்றன. காமம், ஆசை, தன்னலம் போன்றவையே துக்கத்திற்கான முழு காரணமாக இருக்கிறது.

-புத்தர்.

இறை நாமம்


வ்வளவு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், கடவுளை நினைத்து வணங்க வேண்டும். தியானம் மற்றும் பிரார்த்தனையை சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும். தண்ணீர் உடலைத் தூய்மையாக்குகிறது. இறை நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் தூயவனாக மாறு கிறான். ஆகையால் இறைவன் திருநாமத்தை ஜெபியுங்கள்.

-சாரதாதேவி.

Next Story