வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 30 May 2017 6:56 AM GMT (Updated: 30 May 2017 6:55 AM GMT)

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டை என்ற இடம் உள்ளது. இங்குள்ள பொது ஆவுடையார் ஆலயத்தில் அருளும் சிவபெருமான், ஆலமர வடிவில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டை என்ற இடம் உள்ளது. இங்குள்ள பொது ஆவுடையார் ஆலயத்தில் அருளும் சிவபெருமான், ஆலமர வடிவில் இருந்து அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து சிவன் கோவில்களிலும் பகலில் நடை திறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் திங்கட்கிழமை தோறும் நள்ளிரவு 12 மணிக்கு நடைதிறந்து பூஜை செய்யப்படுகிறது. தைப் பொங்கல் திருநாளில் மட்டும் பகல் நேரத்தில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள ஆலமரத்தின் இலைகளை சாப்பிட்டால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Next Story