வாரம் ஒரு அதிசயம்

11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என்றால் அது மிகையல்ல.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்பெற்றது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக இது போற்றப்படுகிறது. வைணவத்தைப் போற்றி வளர்த்தவர்களில் 12 ஆழ்வார்கள் முக்கியமானவர்கள். அவர்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என்றால் அது மிகையல்ல. இந்த ஆலயத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் உள்ளது. இதன் உயரம் 236 அடி ஆகும். 13 நிலைகளுடன் 13 கலசங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்த ராஜகோபுரம். இந்த ஆலயத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
Related Tags :
Next Story