ஆன்மிகம்

தேவியர்கள் இல்லாத முருகன் கோவில் + "||" + Goddesses Without Murugan Temple

தேவியர்கள் இல்லாத முருகன் கோவில்

தேவியர்கள் இல்லாத முருகன் கோவில்
தேவியர்கள் இல்லாத முருகப்பெருமானை கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள கிடங்கூர் சுப்பிரமணியர் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.
பொதுவாக முருகன் திருத்தலங்களில் வள்ளி, தெய்வானை சமேதரராக அவரை தரிசிக்கலாம். தேவியர்கள் இல்லாத முருகப்பெருமானை கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள கிடங்கூர் சுப்பிரமணியர் திருத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த திருத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லை. அதே போல் இந்த திருத்தலத்தில் முருகன் சன்னிதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொடி மரம் அருகே நின்று தான் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

ஆண்கள் கேரள முறைப்படி சட்டை, பனியன் இல்லாமல் வேட்டியுடன் சென்று சாமியை தரிசிக்கின்றனர். ராமபிரான் ராவணனை வதம் செய்ய இந்த ஊரின் வழியே சென்ற போது அன்றைய காலத்தில் கவுன மகரிஷி என்ற முனிவர் தனது இஷ்ட தெய்வமான முருகனை வழிபட்டு வந்து உள்ளார். அப்போது ராமபிரான், முனிவரை சந்தித்து, ராவணனை வென்று விட்டு மீண்டும் இங்கு வரும் போது சந்தித்து பேசுவதாக கூறி சென்றார். அதன்பிறகு ராமபிரான், ராவணனை வென்று சீதாபிராட்டியாருடன் அயோத்திக்கு சென்று விட்டார்.

ராமபிரான் தன்னை வந்து சந்திக்காததால் ஆத்திரம் அடைந்த கவுன மகரிஷி, ‘மனைவி வந்தவுடன் தன்னை மறந்து விட்டானே’ என்று நினைத்து, தான் வணங்கும் முருகப்பெருமானுக்கும் தேவியர்கள் இல்லாத சிலையை செய்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால் தான் இந்த கோவிலில் பெண்கள் சன்னிதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இங்குள்ள முருகப்பெருமான் ‘பிரம்மசாரி முருகன்’ என்று அழைக்கப்படுகிறார். 

ஆசிரியரின் தேர்வுகள்...