ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 1 Aug 2017 1:15 AM GMT (Updated: 31 July 2017 12:19 PM GMT)

உன் மனதை உலகப் பொருட்களை நாடி ஓட விடாதே; அவை கனவுபோல் மறைபவை. உன் உள்ளத்தை என்னிடம் ஒப்படைத்து விடு.

மனம்

உன் மனதை உலகப் பொருட்களை நாடி ஓட விடாதே; அவை கனவுபோல் மறைபவை. உன் உள்ளத்தை என்னிடம் ஒப்படைத்து விடு. என்னையே வணங்கு, என்னையே தியானி. உள்ளத்தை என்னிடம் நிறுத்தி, எப்போதும் நிலைபெற்ற மனதினராய், உயர்ந்த சிரத்தையுடன் என்னை யார் வழிபடுகிறார்களோ, அவர்களே யோகியருள் மிகச் சிறந்தவர்.

ஸ்ரீகிருஷ்ணர்.

இதயம்

உலகத்திற்குச் சூரியன் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இதயம் மனதிற்கு ஒளி தருகிறது. சூரிய அஸ்தமனத்தின் போது, சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்தில்இருந்து விலகி நிற்கும் போது மனதை மட்டுமே காண முடிகிறது.

–ரமணர்.

ஆன்மிகம்

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ, அவனே நாத்திகன். புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத் தான் நாத்திகன் என்று சொல்கிறது. ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, சமயத்திற்கு மிகப் பெரிய முரண்பட்ட கருத்தாகும்.

–விவேகானந்தர்.

Next Story