காசுரனை வதம் செய்த கண்ணன்


காசுரனை வதம் செய்த கண்ணன்
x
தினத்தந்தி 9 Aug 2017 6:42 AM GMT (Updated: 9 Aug 2017 6:42 AM GMT)

ஆகாயத்தில் இருந்து சுவர்க்கவாசிகளான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள்.

கோகுலத்து சிறுவர்கள் அனைவரும் பசுக்களை அழைத்துக்கு கொண்டு யமுனை நதிக்கரைக்கு செல்வார்கள். அங்கு பசுக்களையும், கன்றுகளையும் நீர் அருந்த வைத்து விட்டு, சிறுவர்கள் அனைவரும் ஓய்வெடுப்பார்கள். ஒரு நாள் அப்படி கிருஷ்ணரும், அவரது நண்பர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு பறவையைக் கண்டனர். அதன் அசாதாரண வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அந்த அசுரப் பறவையின் பெயர் ‘பகாசுரன்’. கிருஷ்ணரை அழிப்பதற்காக சம்சன், பகாசுரனை அனுப்பிவைத்திருந்தான்.

அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட அவரது தோழர்கள் பயந்து போனார்கள். ஆனால் பகாசுரன், கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் கிருஷ்ணரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது.

உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது கிருஷ்ணர், அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்கவாசிகளான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். 

Next Story