ஆன்மிகத் துளிகள்


ஆன்மிகத் துளிகள்
x
தினத்தந்தி 15 Aug 2017 12:30 AM GMT (Updated: 2017-08-14T18:41:47+05:30)

ஒவ்வொரு நாளும் பொருட் கள் நாசமடைவதையும், புதிய பொருட்கள் தோன்றுவதையும் பார்க்கிறோம். மனித உயிர்கள் மிருகங்களாக மறு பிறவி எடுக்கலாம்.

நிலையாமை

ஒவ்வொரு நாளும் பொருட் கள் நாசமடைவதையும், புதிய பொருட்கள் தோன்றுவதையும் பார்க்கிறோம். மனித உயிர்கள் மிருகங்களாக மறு பிறவி எடுக்கலாம். மிருக இனம் மனிதர்களாக உயர்வு பெறலாம். தேவர்கள் கூட தங்கள் தேவப் பதவியில் இருந்து கீழே இறக்கப்படலாம். ஆகவே நிலைத்திருக்கும் நிலை என்பது இந்த உலகில் இல்லை.

-ஸ்ரீராமர்

உணர்வு நிலை

உண்மையில் உணர்வுக்கு ஒரு நிலை மட்டுமே உண்டு.  நனவு, கனவு, தூக்கம் ஆகியவை உண்மையாக முடியாது.  நனவு முதலிய மேற்கண்ட மூன்று நிலைகளை நாம் உண்மையென்று கருதக் காரணம், நெடு நாளைய பழக்கம் தான். வெறும் விழிப்புணர்வு மட்டுமே உள்ள நிலையை ‘உணர்வு நிலை’ என்கிறோம்.

- ரமணர்

உண்மை

நாம் போதிய காலம் அழுதாயிற்று.. இனியும் அழ வேண்டாம். எழுந்து நின்று ஆண்மையுடையவர் ஆகுங்கள். உங்கள் உடலையும், அறிவையும் பலவீனமாக்கும் எதையும் வி‌ஷம் என ஒதுக்குங்கள். அதில் உயிரில்லை; உண்மையில்லை என உணருங்கள். உண்மை, வலிமை தரும். உண்மை, நம்மை தூய்மையாக்கும். உண்மை, நல்ல அறிவு மாகும்.

- விவேகானந்தர்

Next Story