சரஸ்வதி பூஜையும்... விஜயதசமியும்...


சரஸ்வதி பூஜையும்... விஜயதசமியும்...
x
தினத்தந்தி 11 Sep 2017 9:36 AM GMT (Updated: 2017-09-11T15:06:11+05:30)

29.9.2017 அன்று புரட்டாசி மாதம் 13-ந் தேதி வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளை “ஆயுதபூஜை” என்றும் அழைக்கின்றோம்.

அன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபாடு செய்யலாம். மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் வழிபாடு செய்யலாம். வழிபாட்டில் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமான பொருட்களை சரஸ்வதி படம் முன்வைத்து வழிபட்டால் நலங்கள் யாவும் வீடு வந்து சேரும் என்பது ஐதீகம்.

மறுநாள் 30.9.2017 புரட்டாசி மாதம் 14-ந் தேதி சனிக்கிழமை விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் செய்யும் எல்லாக்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதுமுயற்சி செய்வதற்கும், குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்யவும், தொழில் வளர்ச்சிக்கான முயற்சியில் ஈடுபடவும் உகந்ததாகும். காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் வழிபாட்டில் ஈடுபடுவது சிறந்தது.

Next Story