ஆன்மிகம்

விநாயகருக்கு முதல் வழிபாடு ஏன்? + "||" + Why the First Worship Ganesha?

விநாயகருக்கு முதல் வழிபாடு ஏன்?

விநாயகருக்கு முதல் வழிபாடு ஏன்?
முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான்.
‘ஓம்’ என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராக இருப்பவர் விநாயகர். விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடப்பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலப்பாகம் சூரியனின் அம்சமாகவும், மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளங்குவதாலேயே முதலில் விநாயகரை வழிபடுகிறோம். விநாயகரை வழிபாடு செய்தாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கும் கிடைத்துவிடும்.