ஒரு மண்டல விளக்கம்
உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் சூரிய ஒளி அவசியமானதாக உள்ளது. அதுபோல, இதர கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அலை வீச்சும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் சூரிய ஒளி அவசியமானதாக உள்ளது. அதுபோல, இதர கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அலை வீச்சும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அவற்றை நாம் உணராவிட்டாலும், கிரகங்களின் அலை வீச்சுக்கள் நம்முடைய இயக்கங்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
எந்த ஒரு செயலும் நன்றாக நடைபெற நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகிய சக்திகளின் துணை வேண்டும் என்ற அடிப்படையில் மண்டல வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, சூரியன் முதல் கேது வரையுள்ள 9 கிரகங்கள், மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகள் மற்றும் அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையான 48- என்பது ஒரு மண்டலம் ஆகும். வருடத்தின் எந்த நாளாக இருந்தாலும், அந்த நாள் தொடங்கி 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கதிர்வீச்சு பெற்ற அனைத்து நாட்களும் கணக்கில் வந்துவிடுகின்றன.
அதன் அடிப்படையில், தொடர்ச்சியாக 48 நாட்களான, ஒரு மண்டலம் காலத்துக்கு செய்யப்படும் எந்த செயலும், வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. சித்த மருத்துவ முறையில் இயற்கை மருந்தை ஒரு மண்டலம் சாப்பிட சொல்வது வழக்கம். அப்படி செய்தால் நோய் நிரந்தரமாக குணமடையும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஆன்மிக ரீதியாக தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் இறைவழி பாடுகள் அல்லது வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
சூரிய கதிர்கள் ஒளி வடிவில் நம்மை தொடுவது போல, பூமியை சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம்மை பாதிக்கின்றன. சூரியனின் புற ஊதா கதிர்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், சூரிய ஒளி மூலம் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. நம்மை சுற்றிலும் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்கள் நமது உடல் மற்றும் மனம் ஆகிய நிலைகளில் பாதிப்பை உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story