சந்திராஷ்டமம்


சந்திராஷ்டமம்
x
தினத்தந்தி 11 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-11T15:17:30+05:30)

ஒருவரது ராசிக்கு, 8–ம் இடத்தில் சந்திரன் வரும்போது ‘சந்திராஷ்டமம்’ என்று சொல்வார்கள்.

ஜோதிட ரீதியாக ஒருவரது ராசிக்கு, 8–ம் இடத்தில் சந்திரன் வரும்போது ‘சந்திராஷ்டமம்’ என்று சொல்வார்கள். இந்த சந்திராஷ்டம காலத்தில் நோய்களுக்கு புதியதாக மருந்து உண்ணக்கூடாது என்பார்கள். மாறாக மருந்து உட்கொண்டால் அவை நிவர்த்தி ஆவதற்குப் பதிலாக, புதிய நோய்களுக்கு வழிவகுத்து விடும். பொதுவாக சந்திராஷ்டம காலத்தில் உடலில் உண்டாகும் காயம், எளிதில் ஆறாமல் ரண வடுவை தந்து விட்டுப் போகும். மனமும், புத்தியும் சஞ்சலப்படும். நினைத்தது நடக்காது. அலைச்சல் அதிகரிக்கும். இவை அனைத்திற்குமே கிரகங்கள் தான் காரணம்.

Next Story