திருநீலகண்ட யாழ்ப்பாணர்


திருநீலகண்ட யாழ்ப்பாணர்
x
தினத்தந்தி 6 Feb 2018 10:28 AM GMT (Updated: 6 Feb 2018 10:28 AM GMT)

திருவெருக்கத்தம்புலியூரில், பாணர் மரபில் தோன்றியவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.

சிவபெருமானின் பாடல்களை யாழில் இசைத்ததால் இப்பெயர் பெற்றார். இவரின் மனைவி மதங்கசூளாமணி இசைக்கேற்பப் பாடும் புலமை பெற்றவர்.

நாடெங்கிலும் உள்ள சிவத்தலங்களுக்குச் சென்று யாழ் இசைப்பதும், பாடி மகிழ்வதும் இவர்களின் தொண்டாக இருந்துவந்தது.

மதுரைக்குச் சென்ற போது, இவரின் குலம் காரணமாக, ஆலயம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. என்றாலும், இவரின் இசையில் மயங்கிய சிவபெருமான், அனைவரின் கனவிலும், ‘‘இவரை எம்முன் கொண்டு நிறுத்துக’’ என்று கூற, இறைவன் முன் நின்று பாடும் பேறு பெற்றவர். சொக்கநாதருடைய அருளால் அமர்ந்து பாட பொற்பலகை பெற்ற அருளாளர்.

இதேபோல, திருவாரூரில் இவருக்கு, தரிசிப்பதற்கு என்றே இறைவன் வடதிசையில் தனி வாசலை வகுத்தருளினார்.

திருஞானசம்பந்தரோடு சீர்காழியில் தங்கியிருந்து அவரின் பாடல்களைப் பாடி மகிழ்ந்தவர். திருநாலூர்ப்பெருமணத்தில் திருஞான சம்பந்தரோடு ஜோதியில் ஐக்கியமானவர். இவருக்கு ராஜேந்திரப்பட்டினத்தில் தனிச் சன்னிதியும் அமைந்துள்ளது. 

Next Story