இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 21 Feb 2018 10:30 AM GMT (Updated: 21 Feb 2018 10:30 AM GMT)

20-2-2018 முதல் 26-2-2018 வரை இந்த வார விசேஷங்கள் பற்றிய குறிப்புகள்...

20-2-2018 முதல் 26-2-2018 வரை

20-ந் தேதி (செவ்வாய்)

திருச்செந்தூர், வென்னிமலை, காங்கேயம், பெரு வயல் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

காஞ்சி காமாட்சி மாசி மக உற்சவம் தொடக்கம்.

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

கோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் உற்சவம் தொடக்கம்.

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

சமநோக்கு நாள்.

21-ந் தேதி (புதன்)

கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.

திருச்செந்தூர் சுப்பரமணியர் சிங்க கேடயத்தில் புறப்பாடு.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (வியாழன்)

கார்த்திகை விரதம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் காலை பூங் கோவில் சப்பரம், இரவு சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்தில் பவனி.

கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ உபதேசம் அருளிய லீலை.

கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (வெள்ளி)

காரமடை அரங்கநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் பால்காவடி உற்சவம், இரவு மின்விளக்கு அலங்கார தங்க ரதத்தில் அம்பாள் பவனி.

கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (சனி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை, மயில் வாகன காட்சி.

ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.

கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு.

காரமடை அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

காங்கேயநல்லூர் முருகப் பெருமான்-தெய்வானை திருமணக் காட்சி.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை.

மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (ஞாயிறு)

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் பவனி.

காரமடை அரங்கநாதர் சிறிய திருவடியில் புறப்பாடு.

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (திங்கள்)

முகூர்த்த நாள்.

சர்வ ஏகாதசி.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.

கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல், தங்க தோளுக்கினியானில் பவனி.

சமநோக்கு நாள். 

Next Story