ஆன்மிகம்

கைரேகை அற்புதங்கள் : சினிமா துறையில் புகழ்பெற வைக்கும் ராகு பகவான் + "||" + Fingerprint miracles :Raghu Bhagavan, who is famous for the cinema industry

கைரேகை அற்புதங்கள் : சினிமா துறையில் புகழ்பெற வைக்கும் ராகு பகவான்

கைரேகை அற்புதங்கள் : சினிமா துறையில் புகழ்பெற வைக்கும் ராகு பகவான்
நவக்கிரகங்களில், மிகவும் கீழ்நிலை வாழ்க்கை வாழும் ஒருவரை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தும் கிரகம் எதுவென்றால், ராகு பகவான் என்றுதான் சொல்ல வேண்டும்.
வறுமையின் அடி பாதாளத்தைச் சென்றடைந்த ஒரு ஜாதகரை, ஒரு காலத்தில் பெரும்புள்ளியாக்கி, சமூகத்தில் நடமாடச் செய்யும் சக்தி ராகு பகவானுக்கு உண்டு. வைராக்கியம் நிறைந்த கிரகம் அது. ராகுவின் ஆட்சி காலம் 18 ஆண்டுகள். தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 11 ஆகிய இடங்களைப் பார்வை செய்வார். ராகு தசையில் சுக்ர புத்தியில் இருந்து இவரது பலம் மிக மிக அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ராகு புகழை கொடுக்கும். வாழ்க்கையில் இடையூறு ஏற்படாத வகையில், அந்த ஜாதகர் காக்கப்படுவார். ராகு எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறாரோ, அந்த கிரகத்தின் பலனை இவர் கொடுப்பார். ஒருவர் ஜாதகத்தில் குரு கிரகம் அமைய, அவருடன் ராகு சேர அந்த நபருக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். ராகு– குரு ஒரே பாதத்தில் இருந்தால், அவர் புகழுடன் நிரந்தரமாக புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமாகத் திகழ்வார்.

இனி கைரேகைப்படி ராகுவின் பலத்தை கண்டறியலாம். கையில் அமைந்துள்ள புத்தி ரேகையின் அடியில் தான் ராகு மேடு அமைந்திருக்கும். விதி ரேகை இந்த மேட்டின் வழியாகத் தான் மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கும். விதி ரேகையில் எவ்வித குறுக்கு வெட்டும் இல்லாமல் ராகு மேடு வழியாக ஊடுருவி, சனி மேட்டுக்குச் சென்றால், அந்த நபருக்கு பெரும் செல்வம் தேடி வரும். அவர் ஒரு புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமாக ஜொலிப்பார். பொதுவாக ராகு மேடு ஒருவரது கையில் புத்தி ரேகையின் அடியில் நிலைத்து அமர வேண்டும். ராகு மேடு இடப்பெயர்ச்சியில் அமையக்கூடாது. ராகு மேடு நிலைத்து பலமுடன் அமைந்து, விதி ரேகை துண்டுபட தொடங்கினால் அல்லது விதி ரேகையில் கருப்பு மச்சம் உண்டானால் அந்த புகழ் உச்சியில் இருந்து அடி பாதாளத்திற்குச் செல்ல நேரிடும்.

–கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.