தீப முகங்களும்.. பலன்களும்..


தீப முகங்களும்.. பலன்களும்..
x
தினத்தந்தி 7 March 2018 10:23 AM GMT (Updated: 7 March 2018 10:23 AM GMT)

தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.

மூன்று முகம்- காரிய வெற்றி, தைரியம், பராக்கிரமம், தைரியம் கிட்டும்.

நான்கு முகம்- நிலம், வீடுகள், வாகனங்கள், கால்நடை விருத்தி, வியாபார அபி விருத்தி, சவுபாக்கியம் உண்டாகும்

ஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வசித்தி, குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.

வாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.

தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ சாத்தி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். 

Next Story