அருள் தரும் அர்ச்சனை பூக்கள்


அருள் தரும் அர்ச்சனை பூக்கள்
x
தினத்தந்தி 11 April 2018 5:11 AM GMT (Updated: 11 April 2018 5:11 AM GMT)

இறைவனை வழிபாடு செய்வதில், மலர்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிறிய பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

பூக்களிலுமே அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக் களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

* அல்லிப்பூ - செல்வம் பெருகும்

* பூவரசம்பூ - உடல் நலம் சீராகும்

* வாடாமல்லி - மரண பயம் நீங்கும்

* மல்லிகை - குடும்ப அமைதி ஏற்படும்

* செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும்

* காசாம்பூ - நன்மைகள் அதிகரிக்கும்.

* அரளிப்பூ - கடன்கள் நீங்கும்

* அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை

* செம்பருத்தி - நோயற்ற வாழ்வு

* ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்

* கொடி ரோஜா - குடும்ப ஒற்றுமை

* ரோஜா பூ - நினைத்தது நடக்கும்

* மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள்

* சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்

* நந்தியாவட்டை - மகப்பேறு உண்டாகும்

* சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு சிறந்தது

* சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது

* மனோரஞ்சிதம் - தேவர்களின் அருள் கிட்டும்

* தாமரைப்பூ - செல்வம் பெருகும்

* நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம்

* முல்லை பூ - தொழில் வளர்ச்சி உண்டாகும்

* பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்

* தங்க அரளி (மஞ்சள் பூ) - கிரக தோஷம் நீங்கும்

* பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்.

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுகள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது. மேலும் இறைவனுக்கு அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் போன்றவற்றை காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான.. ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி அதில் போட்டு மூடிவிடலாம்.

நம்மில் பலரும், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை, தங்களது வாகனங்களில் முன்பக்கம் கட்டுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இதனால் தீமைகள் உண்டாகக்கூடும்.

Next Story