ஆன்மிகம்

கைரேகை அற்புதங்கள் நற்பலன்கள் கிடைப்பது எப்போது? + "||" + Fingerprint miracles When is the Good News Available?

கைரேகை அற்புதங்கள் நற்பலன்கள் கிடைப்பது எப்போது?

கைரேகை அற்புதங்கள்  நற்பலன்கள் கிடைப்பது எப்போது?
ஒவ்வொருவருடைய வாழ்க்கையைப் பற்றி, அவரவர்களே நன்கு அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்வதற்காகத் தான் ‘ஜாதகம்’ என்ற அற்புத வழியை சான்றோர்கள் கண்டுபிடித்து நமக்கு அருளினார்கள்.
கைரேகை சாஸ்திரமும் இதேபோல் தான் . தன் கையைப் பார்த்து, மேடுகளின் அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது, அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

லக்னத்தில் இருந்து 11-ம் பாவம் மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த 11-ம் வீட்டை வைத்து ஒருவருடைய எதிர்காலம் எப்படி அமையும் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேல் நாட்டினரும் கூட நமது ஜோதிடத்தையும், அதன் கணக்கையும் சரியென்று ஒப்புக்கொள்கின்றனர். ‘பைரவதீபிகை’ என்ற ஜோதிட நூல்களில் கூட இந்த 11-ம் பாவத்தின் சிறப்புத் தன்மைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ‘புவன தீபிகை’ என்ற நூலில் உள்ள சுலோகங்களில் கூட இந்த 11-ம் வீட்டைப் பற்றிய பல சிறப்பு தகவல்கள் இருக்கின்றன.


ஒருவர் எவ்வளவு மோசமான கிரக நிலைகளைக் கொண்டு ஜென்மம் எடுத்தாலும், அவருடைய ஜாதகத்தில் சுப கிரகங்கள் நல்லபடியாக இல்லாமல் இருந்தாலும், 11-ம் வீட்டில் லாப ஸ்தானத்தில் மட்டும் ஒரே ஒரு சுப கிரகம் நல்லபடியாக இருந்து விட்டால் போதும். அந்த ஜாதகருக்கு என்றும் தோல்வியே ஏற்படாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். காரியங்கள் தடையின்றி சகல விதமான யோகங்களையும், யாரும் எதிர்பாராத வகையில் அந்த நபர் அடைவது நிச்சயம்.

‘வாழ்க்கையில் ஒரு நாளாவது நான் நிம்மதியாக வாழ்வேனா?’ என்று கவலைப்படுகிற, நொந்து போகிறவர்கள், தங்களின் ஜாதகத்தை எடுத்து 11-ம் வீட்டையும், அதற்குரிய நன்மைகள் எப்படிப்பட்டவை என்பதை பற்றியும் ஒரு முறை அலசி பார்த்தால் போதும். எல்லா விடைகளும் கிடைக்கும். 11-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருக்கும் வரை, கொடுமைகள் சிறிதும் ஏற்படாதவாறு அந்த ஜாதகர் காக்கப்படுவார். மேலும் அந்த சுப கிரகத்தின் திசை வந்துவிட்டால் மேலும் சிறப்படைவார் என்பது உறுதி.

இனி கைரேகைப்படி எப்போது நல்ல காலம் வரும் என்பதை, கையில் அமைந்துள்ள கிரக மேடுகளை வைத்து சொல்ல முடியும். எல்லா கிரக மேடுகளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. கையில் அமைந்துள்ள ஒரு கிரகத்தின் மேடு உப்பலாக அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு அந்த கிரகம் நன்மை செய்துவிடும் என்று கணக்கீடு கொள்ளலாம். மாறாக, அந்த கிரகத்தின் மேடு அமுங்கி மேடே தென் படாமல் அமைந்துவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. எல்லா மேடுகளும் சிறப்பாக இருப்பது நல்லது. அவ்வாறு அமையுமா? என்பது சந்தேகம் தான். ஏதாவது ஒரு கிரக மேடு நன்றாக அமைந்து, அந்த ஜாதகருக்கு அதற்குரிய திசை வரும் காலம் சிறப்பான பலன்கள் உண்டாகும் என்பது விதி. இதை யாராலும் தடுக்க முடியாது. ஜோதிட சாஸ்திரம் கணக்கு முறையில் பலன் கூறப்படுகிறது. ஆனால் கைரேகை பலனானது, ரேகையின் அமைப்பு, கிரக மேடு அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றின் மூலமாகத்தான் கண்டுபிடிக்க முடியும்.

கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்
எல்லோருக்கும் ‘தீர்க்க சுமங்கலி யோகம்’ அமைவதில்லை. வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது.
2. கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு?
நல்ல மக்கள் செல்வம் அடைய யோகம் செய்திருக்க வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் 5-ம் வீடு என்பது புத்திர ஸ்தானத்தைக் குறிக்கும் இடமாகும்.
3. கைரேகை அற்புதங்கள் : வழக்குகளில் வெற்றி யாருக்கு?
செவ்வாய் தசைக்கு அடுத்தபடி, ராகு தசை 18 வருடங்கள், மனிதனின் வாழ்க்கையில் அமைகிறது. பலம் மிகுந்த ராகு தசையில், ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் திடீர் வளர்ச்சியும், முன்னேற்றமும், வெற்றியும் தரும்.
4. கைரேகை அற்புதங்கள் : நீண்ட ஆயுள் யாருக்கு?‘
நெருநல் உளனொருவன் இன்றிலன் என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்று ஆயுளைப்பற்றி வள்ளுவர் சிறப்பாக கூறியிருக்கிறார். உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும், உயிருக்கு மிஞ்சியது ஒன்றும் இல்லை.
5. கைரேகை அற்புதங்கள் : துறவு வாழ்க்கை!
மனிதன் தனித்து இருக்கும் போது, அவனுக்கு நல்ல சிந்தனைகளும் தோன்றலாம்; கெட்ட சிந்தனைகளும் தோன்றலாம். இது இயற்கையாக மனிதனுக்குள் எழக்கூடியது தான்.