யோக நந்தீசுவரர் தவம் செய்த மலை


யோக நந்தீசுவரர் தவம் செய்த மலை
x
தினத்தந்தி 18 July 2018 3:56 PM IST (Updated: 18 July 2018 3:56 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நந்தி மலை.

நந்தி மலையின் உச்சியில் இருந்து தென் பெண்ணை, பாலாறு, அர்க்காவதி ஆறுகள் உற்பத்தியாகின்றன. நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

சோழர் காலத்தில் இந்த மலை ‘ஆனந்த கிரி’ என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இந்த மலையில் தவம் செய்ததா கவும், இதனால் ‘நந்தி மலை’ என இது பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த மலையின் உச்சியில் சோழர்கள் கட்டிய யோக நந்தீசுவர சுவாமி கோவில் உள்ளது. இந்த மலை, துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் காட்சி தருவதால், இந்த மலைக்கு நந்திமலை என பெயர் வந்ததா கவும் சொல்லப்படுகிறது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நந்திமலை அமைந்து இருக்கிறது. 

Next Story