சிவனாக மாறும் பெருமாள்


சிவனாக மாறும் பெருமாள்
x
தினத்தந்தி 24 July 2018 10:24 AM GMT (Updated: 24 July 2018 10:24 AM GMT)

திருப்பதியில் பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார்.

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை.

ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி, மந்திர ரூபத்தில் அவரை ‘சங்கர நாராயணர்’ போல் மாற்றுகிறார்கள். அவருக்கு வில்வ மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது. அந்த வேளையில் பெருமாள் அங்கிருந்து இறங்கி, அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்கச் செல்வதாக ஐதீகம். வெள்ளிக்கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும். மறு படியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுவார்கள். 

Next Story