ஆன்மிகம்

கைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன் + "||" + Fingerprint Miracles: Ability to Improve Others

கைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன்

கைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன்
நவக்கிரகங்களில் ராகு- கேது ஆகிய இரு கிரகங்களும் ஒரு வித்தியாசமான கிரகங்கள். இரண்டும் நிழல் கிரகங்கள். இரண்டு கிரகங்களும், சூரியனை 180 டிகிரியில் சுற்றி வருவார்கள்.
கேது- மனிதனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர். ராகு- மனிதனுக்கு செல்வத்தைக் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் லக்னம், 2, 5, 9, 10, 11 ஆகிய இடங்களில் கேது இருந்தால், அந்த நபர் இறையுணர்வு அதிகம் உள்ளவராக இருப்பார். கேது, சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு சித்த பிரம்மை ஏற்பட வாய்ப்புஉண்டு. அதே வேளையில் கேது, சந்திரனுடன் புதனும் வலிமை இன்றி அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு மன நோய் உண்டாவது உறுதி.


கேது தான் சேர்ந்து இருக்கும் கிரகத்தின் தன்மையை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பலன் கொடுப்பார். லக்னத்தில் கேது பலமுடன் இருந்தால், அந்த ஜாதகர் ஒரு சிவ பக்தனாக திகழ்வார். கணபதியை வணங்கி வருபவர்களுக்கு, கேதுவின் கெடு பார்வை குறையும். மேலும் லக்னத்தில் கேது பலமுடன் அமர்ந்து, அதன் மீது குரு பார்வை செய்தால், அந்த நபர் ஒரு சிறந்த ஜோதிடராகும் நிலை உண்டு. வேதம், விஞ்ஞான அறிவு, திடீர் அதிர்ஷ்டம் போன்றவை வாழ்க்கையில் உண்டாகும்.

குறிப்பாக கேது தசை காலமான ஏழாண்டு காலத்தில், இந்த நிலை உண்டாவது உறுதி. மேலும் முன்பின் தெரியாத ஒருவரை கண்டவுடன், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எடைபோடும் திறன் இருக்கும். அப்படி பிறரை எடைபோட்டுக் கூறும் விஷயங்கள் மிகவும் சரியானதாக இருக்கும். ‘எப்படி இவ்வளவு சரியாக சொன்னீர்கள்?’ என்று கேட்டால், சரியான விளக்கத்தை அளிக்காமல் நழுவுவார்கள்.

இனி கைரேகைப்படி ராகு- கேது பற்றி ஆராயலாம். புத்தி ரேகையின் அடியில், விதி ரேகை, சனி மேட்டுக்குச் செல்லும் ரேகையின் அடிப்பாகம் தான் ராகு மேடு. இந்த மேடு உப்பலுடன் அமைந்து, அதில் ஒரு நட்சத்திரக்குறி அமைந்தவர், தன் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆவது உறுதி. எதிர்பார்த்த அதிர்ஷ்டம், பூமி விற்பனையில் எதிர்பார்த்த அமோக விலை போன்ற பலன்களை ராகு கொடுப்பார். விதி ரேகையின் அடிப்பாகம் தான் கேது மேடு. இந்த மேடு பலமாக அமைந்தவர் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். வங்கியில் பெரும் தொகை இருப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எளிதில் அந்த தொகை கரையாது.

-கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்
எல்லோருக்கும் ‘தீர்க்க சுமங்கலி யோகம்’ அமைவதில்லை. வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது.
2. கைரேகை அற்புதங்கள் : நன் மக்கட்பேறு யாருக்கு?
நல்ல மக்கள் செல்வம் அடைய யோகம் செய்திருக்க வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் 5-ம் வீடு என்பது புத்திர ஸ்தானத்தைக் குறிக்கும் இடமாகும்.
3. கைரேகை அற்புதங்கள் : வழக்குகளில் வெற்றி யாருக்கு?
செவ்வாய் தசைக்கு அடுத்தபடி, ராகு தசை 18 வருடங்கள், மனிதனின் வாழ்க்கையில் அமைகிறது. பலம் மிகுந்த ராகு தசையில், ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் திடீர் வளர்ச்சியும், முன்னேற்றமும், வெற்றியும் தரும்.
4. கைரேகை அற்புதங்கள் : நீண்ட ஆயுள் யாருக்கு?‘
நெருநல் உளனொருவன் இன்றிலன் என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்று ஆயுளைப்பற்றி வள்ளுவர் சிறப்பாக கூறியிருக்கிறார். உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும், உயிருக்கு மிஞ்சியது ஒன்றும் இல்லை.
5. கைரேகை அற்புதங்கள் : துறவு வாழ்க்கை!
மனிதன் தனித்து இருக்கும் போது, அவனுக்கு நல்ல சிந்தனைகளும் தோன்றலாம்; கெட்ட சிந்தனைகளும் தோன்றலாம். இது இயற்கையாக மனிதனுக்குள் எழக்கூடியது தான்.