குருப்பெயர்ச்சியன்று என்ன செய்ய வேண்டும்?


குருப்பெயர்ச்சியன்று என்ன செய்ய வேண்டும்?
x
தினத்தந்தி 25 Sep 2018 8:02 AM GMT (Updated: 25 Sep 2018 8:02 AM GMT)

குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு.

அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல்பவர்களிடம் நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக ஆசி பெறுவது நல்லது.

நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து, பெயர்ச்சிக்கு முன்னதாக அல்லது பெயர்ச்சியன்றோ எப்படி, எப்போது எங்கு குருவை வழிபடுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லா கிரகங்களையும் பெயர்ச்சிக்குப் பின்னால் தான் வழிபடுவர். ‘குரு’ சுப கிரகம் என்பதால் நாம் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்னால் நமது ஜாதகப்படி யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வரவேண்டும் என்பர். அவ்வாறு வழிபட்டால் நாளும் நல்லதே நடக்கும்.

எல்லா தெய்வங்களுக்கும் உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்யலாம். ஆனால் குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட்டால் தான் ‘குருபார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். இல்லையேல் யார் வழிபடச் செல்கிறார்களோ அவர்களுக்குத் தான் பலன் கிடைக்கும்.

குரு சன்னிதியில் குரு கவசம் பாடினால் காரியங்களில் வெற்றி கிட்டும். சுண்டல், கடலை தானம் கொடுத்தால் அண்டிவந்த துயரங்கள் அகன்று ஓடும். குரு பகவானைக் கொண்டாடி வழிபட்டால் நன்மை செய்வார்.

Next Story