பிள்ளையார் பிடிப்பதன் பலன்


பிள்ளையார் பிடிப்பதன் பலன்
x
தினத்தந்தி 5 Oct 2018 7:06 AM (Updated: 5 Oct 2018 7:06 AM)
t-max-icont-min-icon

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார்.

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். எல்லா வளங்களையும் தருவார்.

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வ நிலையைஉயரச் செய்வார்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால், உஷ்ண நோய்கள் நீங்கும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

சாணத்தால் பிள்ளையார் செய்து வணங்கினால், சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெயில் பிள்ளையார் செய்து வணங்கினால், கடன் தொல்லை நீங்கும்.

சர்க்கரையில் விநாயகர் உருவம் செய்து வழிபட்டு வந்தால், சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

பசுஞ் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட தீராத நோய்கள் கூட தீரும்.

கல் விநாயகரை வணங்கி வந்தால் வெற்றிகளைத் தருவார்.

மண் விநாயகரை வழிபாடு செய்து வந்தால், உயர் பதவிகள் கொடுப்பார்.
1 More update

Next Story