திருப்பூரில் கொங்கணகிரி கந்தசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா


திருப்பூரில் கொங்கணகிரி கந்தசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 10:30 PM GMT)

திருப்பூர் கொங்கணகிரி கந்தசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

திருப்பூர்,

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவில்கள் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் வருகிற 13-ந்தேதி சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பூர் காலேஜ் ரோட்டில் கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கந்த கந்த சுப்பிரமணியசாமி கோவிலில் 6-ம் ஆண்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண விழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் காப்புகட்டி விரதம் மேற்கொள்ள தொடங்கினார்கள்.

வருகிற 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கந்தபெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் வேல்பூஜையுடன் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மணிகண்டன், தக்கார் லோகநாதன், திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story