இந்த வார விசேஷங்கள் : 18-12-2018 முதல் 24-12-2018 வரை


இந்த வார விசேஷங்கள் : 18-12-2018 முதல் 24-12-2018 வரை
x
தினத்தந்தி 18 Dec 2018 11:09 AM GMT (Updated: 18 Dec 2018 11:09 AM GMT)

18-ந் தேதி (செவ்வாய்) * வைகுண்ட ஏகாதசி. * சகல விஷ்ணு ஆலயங்களிலும் இராபத்து உற்சவம்.

* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்திலும் சுவாமி பவனி.

* குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்தி களுடன் ரத உற்சவம்.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

* காஞ்சீபுரம் பச்சை வண்ணன், பவள வண்ணன் கருட பரமபத வாசல் திறப்பு விழா.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (புதன்)

* திருப்பதி நவநதி மகா தீர்த்தம்.

* நாச்சியார்கோவில் தெப்ப உற்சவம்.

* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை ருத்ராட்சி விமானத்தில் பிட்டுக்கு மண்சுமந்த லீலை.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

* சங்கரன்கோவில் சங்கரநாராயணர் யானை வாகனத்திலும், கோமதி அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (வியாழன்)

* பிரதோஷம்.

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்தில் வீதி உலா.

* சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அஷ்டாபிஷேகம்.

* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய் இரவு வெள்ளி குதிரையில் சேவகனாக காட்சியருளல்.

* வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்கார சப்பரத்தில் பவனி.

* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய ஆலயங்களில் உற்சவ சேவை.

* கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (வெள்ளி)

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஈசன் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் திருக்கோல காட்சி.

* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகா ரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.

* சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தந்த பல்லக்கில் வீதி உலா.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

* மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (சனி)

* பவுர்ணமி.

* தத்தாத்ரேயர் ஜெயந்தி.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரவு நடராஜர் மகா அபிஷேகம்.

* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.

* சிதம்பரம் நடராஜ மூர்த்தி- சிவகாமசுந்தரி ரத உற்சவம், இரவு இருவரும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளல்.

* சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் ரத உற்சவம்.

* திருமோகூர் காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவம்.

* சமநோக்கு நாள்.

23-ந் தேதி (ஞாயிறு)

* ஆருத்ரா தரிசனம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாம்பிரசபா நடனம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராட்டினம், பொன்னூஞ்சல்.

* ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசம் வழங்கிய காட்சி.

* சிதம்பரம் ஆடல்வல்லபிரான் சித்திரசபையில் சிதம்பர ரகசிய பூஜை.

* மேல்நோக்கு நாள்.

24-ந் தேதி (திங்கள்)

* காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

Next Story