இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 8 Jan 2019 6:27 AM GMT (Updated: 8 Jan 2019 6:27 AM GMT)

8-1-2019 முதல் 14-1-2019 வரை

8-ந் தேதி (செவ்வாய்)
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம், 16 வண்டி சப்பரத்தில் பவனி.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு.
  • மதுரை செல்லத்தம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி.
  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
  • குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
  • மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (புதன்)
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளழகர் திருக்கோலமாய் இரவு சந்திர பிரபையில் பவனி.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.
  • சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
  • மேல்நோக்கு நாள்.

10-ந் தேதி (வியாழன்)
  • சதுர்த்தி விரதம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம், கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலமாய் மாலை தந்த பரங்கி நாற்காலியில் புறப்பாடு.
  • பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனி.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
  • மேல்நோக்கு நாள்.
11-ந் தேதி (வெள்ளி)
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை தங்க சப்பரத்தில் வீதி உலா.
  • கீழ்நோக்கு நாள்.
12-ந் தேதி (சனி)
  • விநாயகர் சஷ்டி.
  • திருநெல்வேலி, குன்றக்குடி, பழனி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமி மலை ஆகிய திருத் தலங்களில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜ கோலமாய் காட்சியளித்தல், இரவு தங்க அம்ச வாகனத்தில் புறப்பாடு.
  • மேல்நோக்கு நாள்.
13-ந் தேதி (ஞாயிறு)
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம்.
  • காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள், திருச்சேறை சாரநாதர் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
  • மேல்நோக்கு நாள்.
14-ந் தேதி (திங்கள்)
  • போகி பண்டிகை.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் ஊர்வலம், இரவு தங்க கவசம் அணிந்து ஆளேறும் பல்லக்கில் பவனி.
  • திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
  • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு.
  • சமநோக்கு நாள்.

Next Story